வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (16:19 IST)

ஸ்டெர்லைட் எதிர்ப்பா? மோடி எதிர்ப்பா? வைகோவுக்கு தமிழிசை கேள்வி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25 ஆண்டுகளாக சட்ட போராட்டமும் சமூக போராட்டமும் செய்து வருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. தற்போது ஸ்டெர்லைட் விவகாரம் வீரியமாகி அனைத்து கட்சிகளும், தூத்துக்குடி பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வைகோ தற்போது வாகன பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் வைகோவின் இந்த வாகன பிரச்சாரம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரம் என்ற பெயரில் வைகோ, பிரதமர் மோடி எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்துவருவதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: வைகோவின் வாகன பரப்புரையை தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு பரப்புரை என்ற பெயரில் மோடி எதிர்ப்பு பரப்புரை செய்து வருகிறார் வைகோ. முதலீடு, வேலைவாய்ப்பை உருவாக்க பெரும் பணி செய்துவரும் மோடியை விமர்சிக்க வைகோ தகுதியற்றவர்' என்று தமிழிசை கூறியுள்ளார்.