1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (12:27 IST)

தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை: சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் சனி ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதை அடுத்து தென் மாவட்ட மக்களீன் வசதிக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்புத்தாண்டு சிறப்பான முறையில் கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருவதால் அதனை அடுத்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் சென்னையில் பணிபுரிந்து வரும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 
 
இந்த சிறப்பு பேருந்துகள் குறித்த தகவல்கள் மற்றும் முன்பதிவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதளத்தை சென்று அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது
 
Edited by Mahendran