1-9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை எப்போது என்பது குறித்து அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு அடைத்து தற்போது 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. பொது தேர்வு முடிந்தவுடன் அந்தந்த மாணவர்களுக்கு விடுமுறை என்ற நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிக்குள் தேர்வுகள் முடிந்து விடும் என்றும் அதேபோல் நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு ஏப்ரல் பத்தாம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் தேர்வுகள் முடிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டில் ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து அனைத்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
Edited by Siva