தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி: மத்திய அரசின் திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?
தமிழகத்தில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை காலியாகும் கடைசி நேரத்தில்தான் சமீபத்தில் மத்திய அரசுக்கு தடுப்பூசி அனுப்பிய நிலையில் தற்போது தமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி முதல் கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நேற்று வரை ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தமிழகத்தில் தற்போது 7.24 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
தமிழகமே தடுப்பூசி உற்பத்தி மையத்தை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது