வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (12:29 IST)

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் உடனடியாக தடுப்பூசி உற்பத்தியை தொடங்க உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது 
 
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அங்கு உடனடியாக தடுப்பூசியை உற்பத்தியை தொடங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய மாநில அரசுகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும்போது நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் மேலும் தமிழக அரசு குத்தகைக்கு கேட்ட விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
 
மேலும் மத்திய மாநில அரசுகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது நீதிமன்றம் தலையிட உள்ள தலையிட விரும்பவில்லை என்றும் எனவே செங்கல்பட்டு தடுப்பு ஊசி உற்பத்தி மையத்தில் தடுப்பூசி தயாரிக்க உத்தரவிட முடியாது என்றும் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது