வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (07:27 IST)

ஜூலை 31 உடன் முடிகிறது கவர்னரின் பதவிக்காலம்.. ஆர்.என்.ரவி நீட்டிப்பாரா?

governor ravi
ஒரு மாநிலத்தில் கவர்னராக நியமனம் செய்யப்பட்டவர் ஐந்து ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார் என்ற நிலையில் வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் தமிழக கவர்னர் ஆர்என் ரவி பதவி காலம் முடிவடைகிறது . இந்த நிலையில் தற்போது டெல்லி சென்றுள்ள கவர்னர் ஆர்என் ரவி  பிரதமர் மோடி , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்த நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தமிழக கவர்னர் மட்டுமின்றி கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அதே போல் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளையும் வகித்து வருவதால் அந்த இரண்டு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது தவிர மேலும் சில மாநில கவர்னர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் தமிழகம், கேரளா,தெலுங்கானா உட்பட சில மாநிலங்களில் கவர்னர்களை நியமனம் செய்வது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கு ஆர்என் ரவி கவர்னராக நீடிப்பாரா அல்லது புதிய கவர்னர் நியமனம் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva