வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (19:45 IST)

அஞ்சல் அலுவலக படிவங்களில் தமிழ்: மதுரை எம்.பி.க்கு கிடைத்த வெற்றி!

அஞ்சல் அலுவலகங்களில் தமிழ் சமீபத்தில் நீக்கப்பட்டு இருந்த நிலையில் மதுரை எம்பி எஸ் வெங்கடேசன் அவர்கள் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். மீண்டும் அஞ்சல் அலுவலக படிவங்களில் தமிழ்மொழி இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மீண்டும் ஆன்லைன் அஞ்சல் அலுவலகங்களில் தமிழ்மொழி இணைக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மதுரை எம்பி வெங்கடேசன் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பதாக
 
அஞ்சல் பண விடை படிவம் அழகு தமிழிழும் கிடைக்கும்.
 
தமிழுக்கு கிட்டிய இன்னுமொரு வெற்றி.
 
எனது கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சகமும், அஞ்சல் பொது மேலாளரும் பதில்.
 
நடவடிக்கைக்கு நன்றி.
 
வாழ்க தமிழ்