வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (17:48 IST)

ராவணனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் மரணம்!

ராமாயண தொடரில் ராவணனாக நடித்துப் புகழ்பெற்ற அரவிந்த் திரிவேதி இன்று காலமானார்.

இந்தியாவில் ராமாயணம், மகாபாரதம் தொடர் மக்களிடையே மிகவும் பிரபலம். இந்த இதிகாசம் குறித்த தொடர்களில் நடிப்பவர்களும் மக்களிடையே நல்ல பிரபலம். இந்நிலையில், ராமாயண தொடரில் ராவணனாக நடித்து புகழ்பெற்ற அரவிந்த் திரிவேதி இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் 300க்கும் மேற்பட்ட குஜராத்தி படங்களில் நடித்துள்ளார். இவரது இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.