தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: சேலத்தில் மட்டு 101.84 பாரன்ஹீட்!
தமிழகத்தில் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டததை அடுத்து கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு வரை தமிழகத்தில் வறண்ட வானிலை இருக்கும் என்று கூறியுள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சேலத்தில் மட்டும் 101.84 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
மேலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை இருக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மதுரை மற்றும் கரூரில் வெப்பநிலை இன்று 99.5 டிகிரி பாரன்ஹீட் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது., எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.