செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (20:00 IST)

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.  
 
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவின் மரணத்திற்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி இருந்தனர்.
 
மேலும் சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7-பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. 

 
இந்நிலையில் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.   மனுவில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.