செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 21 அக்டோபர் 2021 (19:43 IST)

இந்தியாவில் வாரிசு அரசியல்

இந்தியாவில் வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறப்பதாக விமர்னங்கள் எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில்  சமாஜ்வாதி கட்யின் முலாயம் சிங் யாதவ் கட்சியின்  அவரது மகன் அகிலேஷ் முதவராக பணியாற்றினார். அதேபோல்,  பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் சிறைக்குச் சென்றபின் அவரது மகன்கள் கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்தனர். காங்கிரஸில் நேருவுக்குப் பின்னர் இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி அவரது மறைவுக்குப் பின்னர் சோனியா காந்தி தற்போது ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி முன்னிடுத்தப்படுவதாகக் கூறப்படுகிறாது.

மேலும், தமிழகத்தில் திமுகவில் கலைஞருக்குப்  பின்னர் ஸ்டாலின் அக்கட்சியின் தலைவரானார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அப்பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மதிமுக நிறுவனர் வைகோ அவரது மகனுக்கு கட்சியின் முக்கியப் பதவி கொடுத்தார். இதுகுறித்த விமர்சனங்கள்  இணையதளத்தில் பரவிவருகிறது.