ரஜினி பல ஆண்டுகளாக டிரைலரை மட்டுமே காட்டி வருகிறார்: சுப்பிரமணியன் சுவாமி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவர் அதிகாரபூர்வ அரசியல் கட்சியை தொடங்க வில்லை. இருப்பினும் அவர் கட்சி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்திருப்பதாகவும் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அவர் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று ஒரு சிலரும், வரமாட்டார் என்று ஒரு சிலரும், வழக்கம்போல வருவேன் வருவேன் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றிக்கொண்டு இருப்பதாக ஒரு சிலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி அவர்கள் கூறியபோது ’நடிகர் ரஜினி பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என்று வெறும் டிரைலரை மட்டுமே காண்பித்து வருகிறார். திரைத்துறையினர் அரசியலுக்கு வந்தால் தொண்டனாக இருக்க வேண்டுமே தவிர தலைவராக வருவதற்கு நினைக்கக்கூடாது’ என்று கூறியுள்ளார். சுப்பிரமணியம் சுவாமியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது