12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை ஆளுனருக்கு திருப்பி அனுப்பிய மாணவியின் தந்தை: ஏன் தெரியுமா?
12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை ஆளுனருக்கு திருப்பி அனுப்பிய மாணவியின் தந்தை: ஏன் தெரியுமா?
தனது மகளின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை ஆளுநருக்கு திருப்பி அனுப்பிய மாணவியின் பெற்றோரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஒரு.
திருவள்ளூரை சேர்ந்த ரயிஸா என்ற மாணவியின் தந்தை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் தனது மகளை 12ஆம் வகுப்பு சான்றிதழை ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என்றால் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வைத்து என்ன செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.