ஏழை மாணவர்களை கொல்லக்கூடியது நீட் தேர்வு- முதல்வர் ஸ்டாலின்
நீட் தேர்வு ரத்து குறித்த மசோதாவை ஆளு நர் ரவி அவர்கள் சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இந்நிலையில் ஆளு நரைத் திரும்ப பெற வேண்டும் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கருத்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கரி 8 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் கூட்டியுள்ளதாக செயலாளர் கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதன்படி இன்று காலை சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோத மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், ஏழை மாணவர்களை கொல்லக்கூடியது நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் சாதமாக இருக்கிறது. இந்த நீட் தேர்வு மருத்துவர் ஆக வேண்டுமென்று விரும்புகிற மாணவர்களின் கனவில் தடுப்புச் சுவர் எழுப்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.