வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (13:02 IST)

டி.எஸ்.பிக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

விருதுநகர் மாவட்டத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்ற இடத்தில் புகுந்த மர்ம நபர்கள் டி.எஸ்.பியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகமெங்கும் நடைபெற்ற ஊராட்சி உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மறைமுக தேர்தலில் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மறைமுக தேர்தல் நடத்தப்படும் இடங்களில் கட்சியினர் இடையே மோதல்களும் நடைபெற்று வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் திடீரென தேர்தல் பகுதியில் நான்கு மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்களை தடுக்க வந்த டி.எஸ்.பி வெங்கடேசனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். அந்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.