செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (09:07 IST)

திராவிட அரசியல் கெட்டுப் போய் விட்டது – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் திராவிட அரசியல் கெட்டு போய் விட்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்ய அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக திருச்சி சென்ற கமல்ஹாசன் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் ”தமிழகத்தில் திராவிடம் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. தற்போது திராவிட அரசியல் கெட்டு போய் விட்டது. தை சரிசெய்யும் பணியில்தான் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் ரஜினியின் தர்பார் பட சர்ச்சை குறித்து பேசிய அவர் பராசக்தி காலம் முதற்கொண்டே இதுபோன்ற தணிக்கை பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.