ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (20:58 IST)

பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டி...அமைச்சர் எம்,ஆர்.விஜயபாஸ்கர்

பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டி...அமைச்சர் எம்,ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு தமிழக  போக்குவரத்துறை அமைச்சர் எம்,ஆர்.விஜயபாஸ்கர் பரிசுத் தொகை  மற்றும் வெற்றிக்கோப்பைகளை வழங்கி கெளரவித்தார்.
 
மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெ.ஜெயலலிதாவின்  72 - வது  பிறந்த தினத்தினை முன்னிட்டு  கரூர்  வடக்கு நகர அதிமுக சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. 
 
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களாக இரவு பகலாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை,  திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு  உள்ளிட்ட  தமிழத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 42 அணிகள்  பங்கு பெற்றன. முற்றிலும் நாக் அவுட் முறையில், கால் இறுதி, அரையிறுதி, இறுதி என்று இரண்டு தினங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியில் ஒட்டன்சத்திரம் சண்முகா மெமோரியல் அணியினரும் முதல் பரிசினையும், தமிழ்நாடு ஜீனியஸ் கபாடி அணியினர் இரண்டாம் பரிசையும், சென்னை ஜேப்பியார் அணியினர் மூன்றாம் பரிசையும்,  தமிழ்நாடு  பி டீம்  அணியினர் நான்காம் பரிசினையும் பெற்றனர். பரிசுகள் வென்ற வீராங்கனைகளுக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசினையும், கோப்பைகளையும் தந்து பராட்டினர்.
 
கரூர் வடக்கு நகர அ.தி.மு.க செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.