ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது- முதல்வர் விமர்சனம் !
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வரவனை ஊராட்சியில் உள்ள 10 ஊர்களுக்கு மரக்கன்று வழங்குதல் மற்றும் காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடுதல், தண்ணீர் தொட்டி வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் 23 மற்றும் 24 [ ஞாயிறு திங்கள் இரண்டு நாள் நடைபெறுகிறது.
இம்முயற்சியில் மூலம் 10 ஊர்களில் உள்ள 777 குடும்பங்களுக்கு 2331 மரங்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் ஆகியவை வழங்கப்படுகிறது. வரும் ஜுலை மாதத்தில் வரவனை ஊராட்சியில் உள்ள மற்ற ஊர்களுக்கும் மரம் கொடுக்கப்பட இருக்கிறது. அப்போது ஒரு ஊராட்சி முழுக்க பழவகை மரங்களால் ஓரிரு ஆண்டுகளில் மக்கள் பயன் பெறுவார்கள்.
வ. வேப்பங்குடியை பசுமைக்குடி என்று பசுமையாக மாற்ற எனது கிராமத்தினை சுற்றி மரங்கள், பழ வகை மரங்கள், காய்கறி தோட்டம், வீடு தோறும் காய்கறி என்று மாற்றியதன் அடுத்த முயற்சியாக பசுஞ்சோலை ஊராட்சியாக மாற்ற எதிர் வரும் மழைக்காலத்தில் இன்னும் மரம் நட இருக்கிறேன், அதற்கு முன்னர் வீடு தோறும் பழவகை மரங்கள் கொண்ட ஊராட்சியாக மாற்றும் முயற்சி இது.
ஜெய் முத்துகாமாட்சி என்பவரின் முயற்சி தான் நலம் நண்பர்கள் குழு. அவர் இக்குழுவின் மூலம் அமெரிக்காவில் இருக்கும் நன்கொடையாளர்கள் மூலம் பணம் பெற்று இதுவரை 32000 மரங்களுக்கு மேல் வழங்கி இருக்கிறார். மொத்தமாக 1 லட்சம் மரம் நட வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுதும் மரம் வழங்கி வருகிறார்கள். ஒரு குடும்பம் 3 மரம் என்ற திட்டத்தின் மூலம். எனக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் சுரேஷ் பாஸ்கரன் [ திருச்சியை சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்] மற்றும் வெங்கி உடையவர் [ கரூரை சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்]. மூவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.
இந்நேரத்தில் எனது தந்தை வரவனை ஊராட்சி மன்ற தலைவர் திரு. மு. கந்தசாமி அவர்களுக்கும் , இர. வேல்முருகன், த. காளிமுத்து, க. கவிநேசன் சோலைவனம் ஸ்ரீதர், இளவரசன், பாலா மற்றும் பசுமைக்குடி இளைஞர்களுக்கும், வரவனை ஊராட்சியில் உள்ள கிராம மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
விவசாயிகளின் தொடர் வருவாய்க்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும், தமிழகத்தின் பசுமையை மீட்டுடுக்கவும் இணைந்து முன்னெடுப்போம் " ஒரு குடும்பம் மூன்று மர கன்றுகள் திட்டத்தின் மூலம். இத்திட்டத்தில் ஒரு கிராமத்தை தத்து எடுத்து அதில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மூன்றடி வளர்ந்த ஒரு தென்னை மரம், ஒரு கொய்யா மரம், ஒரு மாமரம் ஆகிய 3 மரங்களை பெற்று பயனடையுமாறு வழிவகை செய்யப்படுகிறது.
பொது இடங்களில் நடும் போது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அதிகம். வீடுகளுக்கு கொடுக்கும் போது அவர்கள் பராமரித்துவிடுவார்கள். தண்ணீர் ஊற்றுவது சுலபம். பழ வகை மரங்களாக கொடுக்கும் போது மக்களுக்கு எதிர்காலத்தில் பழங்கள் பயன் தரும். வீடுகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரம் வளர்ப்பின் மீதான அக்கறையை அதிகப்படுத்தும் என்ற பல காரணங்களால்
எனது பங்களிப்பாக 40000 ரூபாய் [ காணியாளம்பட்டி பள்ளியில் நாளை மரம் நட நாளை திங்கள் தண்ணீர் தொட்டி வழங்குதல் சேர்த்து] பொருட்செலவும், 1 லட்சத்து 50000 ரூபாய் செலவில் நலம் நல்கும் நண்பர்கள் மூலமும் இதனை இன்று செயல்படுத்தி இருக்கிறோம். மொத்தம் 2 லட்சம் செலவில் வரவனை கிராமத்தில் உள்ள ஊர்களை பசுமையாக்கி, நிலத்தடி நீர்மட்டம் பெருக்கி, மக்களின் வாழ்வாதாரம் காக்கும் முயற்சி இது.
நலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு [[ ந