”சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பை மாணவர்களுக்கு வழங்குங்கள்” ஸ்டாலின் வலியுறுத்தல்
மதங்களின் பெயரால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க மத்திய அரசு சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு தரவேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வழங்கிவந்த இசட் பிரிவு பாதுகாப்பு தற்போது திரும்பப்பெறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ”இத்தனை வருடங்கள் எனக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்கியதற்கு மனமாற நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை தடுக்க மத்திய அரசு மாணவர்களுக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்கவேண்டும்” என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.