வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (14:03 IST)

உடைத்தெறியப்பட்ட ‘அம்மா உணவகம்’ போர்டு: ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு

உடைத்தெறியப்பட்ட ‘அம்மா உணவகம்’ போர்டு: ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு
இன்று காலை சென்னை ஜெஜெ நகரில் உள்ள அம்மா உணவகத்தை மர்ம நபர்கள் சிலர் சூரையாடியதாக வெளி வந்த தகவலை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
சென்னை ஜெஜெ நகரில் உள்ள அம்மா உணவகம் போர்டை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் சிலர் கலைஞர் உணவகம் என பெயர்மாற்றம் இருப்பதாக அறிவித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து முக ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக சென்னை மாநகர முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா சுப்பிரமணியம் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் உடைத்தெறிந்த போர்டை மீண்டும் அதே இடத்தில் மாட்டவும் அவர் ஏற்பாடு செய்தார். இதுகுறித்த வீடியோவையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து திமுகவினரே தவறு செய்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது