வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (11:09 IST)

8 தமிழ் மீனவர்களுக்கு தலா 60 லட்சம் அபராதம் –இலங்கை நீதிமன்றம் அராஜகம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 8 மீனவர்களுக்கும் தலா 60 லட்சம் அபராதமும் மூன்று மாதம் சிறை தண்டனையும் வித்தித்துள்ளது இலங்கை கல்பிட்டி நீதிமன்றம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஸ்புரத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் படகில் ரூபின்ஸ்டன், அந்தோனி, வினோதன், வில்பிரட், பாக்கியம், விஜய், அந்தோனி, ரமேஷ், ஆரோக்கியம் ஆகிய எட்டு பேரும் கடந்த் ஆகஸ்ட் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

இதையடுத்து அம்மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மீனவர்களின் குடும்பத்தினர் இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஆக்க்ப்பூர்வமான முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் கல்பிட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் மீனவர்களுக்கு தலா 60 லட்சம் அபராதமும் மூன்று மாதம் சிர்றைத்தண்டனையும் வித்திதுள்ளது. சொந்தமாகப் படகு கூட இல்லாமல் அடுத்தவரின் படகில் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் மீன்வர்களுக்கு 60 லட்சம் அபராதம் விதித்தால் அவர்களால் எப்படிக் கட்ட முடியும். இந்த செய்தியைக் கேட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கையறுநிலையில் உள்ளனர்.