திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (12:12 IST)

மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க புதிய திட்டம்': செங்கோட்டையன் அறிவிப்பு

மாணவர்கள் பள்ளிக்கு சென்றார்களா? அல்லது எங்கே இருக்கின்றனர் என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வசதியாகா செல்போன் மூலம் கண்காணிக்க   'சிப்' பொருத்தபட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்" என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி கல்வி துறையில் இன்னும் 15 தினங்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



 
 
கோபிசெட்டிபாளையத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியபோது "மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மிதி வண்டிகள் விரைவில் வழங்கப்படும். மேலும்  'சிப்' பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என்பதை ஸ்மார்ட் போன்  மூலம் பெற்றோர்களால் கண்காணிக்க முடியும்" என்றார். 
 
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும்" என்றும் அவர் கூறினார்.