1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (11:22 IST)

மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பிய கல்லூரி முதல்வர்!

மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பிய கல்லூரி முதல்வர்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரி முதல்வர் ஒருவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாசமாக மெஸ்ஸேஜ் அனுப்பியது அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
நாமக்கல் மாவட்டம் வளையக்காரனுரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தவர் குமார் சார்லிபால் என்பவர். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளுக்கு ஆபாசமாக மெஸ்ஸேஜ் அனுப்பியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் முதல்வர் குமார் சார்லிபாலின் கார் கண்ணாடியை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கல்லூரியின் முன்பு உள்ள சாலையில் 300 பேர் திரண்டு சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனையறிந்த போலீசார் அங்கு உடனடியாக விரைந்து வந்து அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் முதல்வர் குறித்து புகார் அளித்ததையடுத்து முதல்வர் குமார் சார்லிபால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.