புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (11:10 IST)

வெற்றி பெற்றதும் திமுகவில் இணைந்த கவுன்சிலர்கள்! – சிவகங்கையில் பரபரப்பு!

சிவகங்கையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிற கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் சிலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். சிவகங்கை நகராட்சி 22வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சரவணன். இவர் தற்போது அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். மேலும் வார்டு 4 மற்றும் 19ல் வென்ற சுயேட்சை வேட்பாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.

நேற்று இரண்டு அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்த நிலையில் இன்றும் ஒருவர் திமுகவில் இணைந்துள்ளது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.