செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (09:36 IST)

நான் அனுமதி கேட்டப்போ தரலை; பாஜகவுக்கு தராங்க! – சீமான் சாடல்

தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் முருகனின் அறுபடை வீடுகளில் வேல் யாத்திரை நடத்த உள்ளதாக பாஜக தெரிவித்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கவும் அரசிடம் கோரியிருந்தது. ஆனால் வேல் யாத்திரை தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என அதற்கு தடை விதிக்க விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”கடந்த ஆண்டு வேல் யாத்திரை நடத்த நான் அரசிடம் அனுமதி கோரியபோது மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாஜகவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக – பாஜகவையும், திமுக – காங்கிரஸையும் கை விட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.