முருகா என்றால் என் முகமே மக்களுக்கு நினைவில் வரும் – சீமான் கருத்து!
முருகன் என்று சொன்னால் மக்களுக்கு சீமான் முகமே நினைவுக்கு வரும் என்று நாம்தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பாஜக இப்போது தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு பலமான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து பேசியுள்ளார்.
அதில் முப்பாட்டன் முருகன் என நான் வேல் தூக்கியபோது என்னை கேலி செய்தார்கள். முருகன் பிறந்தநாளுக்கு விடுமுறை கேட்டபோது எனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. இப்போது பாஜக பல பிரச்னைகளை மறைக்க வேல் யாத்திரை செல்கிறது. மக்கள் பிரச்னைக்காக பாஜக நிற்காது. ஏனென்றால் பிரச்னையே பாஜகவால்தான். என்னதான் 'வேல்'ஐ வைத்துக்கொண்டு பாஜக அரோகரா போட்டாலும் முருகா என்றால் மக்களுக்கு சீமான் முகமே நினைவுக்கு வரும் எனக் கூறியுள்ளார்.