புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 25 டிசம்பர் 2021 (14:30 IST)

மாணவிகளை சாதி ரீதியாக இழிவு செய்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!

திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் கீதா என்ற ஆசிரியை சாதி ரீதியாக இழிவுப்படுத்திப் பேசியதாக மாணவிகள் குற்றச்சாட்டை வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இடுவாய் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கீதா. இவர் அப்பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி சாதி ரீதியான இழிவான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இது சம்மந்தமாக மாணவிகள் புகார் திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை அலுவலருக்கு சென்றுள்ளது.

அவர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு வந்து மாணவிகள் முன்னிலையில் கீதாவை விசாரணை செய்துள்ளார். அப்போது மாணவிகளின் குற்றச்சாட்டு உண்மை என்பதை அறிந்து கீதாவை பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதையடுத்து போலிஸாரிடம் ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் அளித்த புகாரை அடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.