1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (21:34 IST)

சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்...

திருப்பூரில் சிறுவனை நாய்கள் கடித்துக்குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பூர் மாவட்டம் தெற்உத் தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. இவரது மகன் பிரகதீஸ் 6 வயது சிறுவன். இவர் தன் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்குச் சுற்றித் திரிந்த தெருநாய்கள் சிறுவன் பிரகதீஸைக் கடித்துக் குதறியது.

இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இதேபோல் ஒரு சிறுவனை நாய் தூக்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.