1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2018 (23:08 IST)

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடருமா? தமிழக அரசு அறிக்கை

சமீபத்தில் பேருந்து கட்டணங்களை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் திடீரென பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் நிறுத்தப்படும் என வதந்திகள் பரவின. இதனால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பஸ் பாஸ் சலுகை, பேருந்துக் கட்டண மாற்றியமைப்பிற்கு பின்பும் தொடர்ந்து வழங்கப்படும்

இதுமட்டுமில்லாமல் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 100 சதவீத கட்டண சலுகையுடன் வழங்கப்படும் பஸ் பாஸ் சலுகையும், தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் வழங்கப்படும் பஸ் பாஸ் சலுகையும் தொடர்ந்து வழங்கப்படும்

இதற்காக ஆகும் ரூ.540.99 கோடியினை தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எழும் சிரமத்தை கருத்தில் கொண்டு 498 விரைவு மற்றும் சொகுசு பேருந்துகள், சாதாரண மற்றும் விரைவு கட்டண பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசின் போக்குவரத்து துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.