வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 ஜனவரி 2018 (11:51 IST)

நாள் முழுவதும் பயணிக்கும் ரூ.50 டிக்கெட் விலை உயர்வு -பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை போன்ற நகரங்களில் ஒரு நாள் முழுவதும் பயணிக்கும் ரூ.50 டிக்கெட் விலையை அரசு உயர்த்தியுள்ளது.

 
தமிழக அரசின் பேருந்து கட்டணம் நேற்று இரவு திடீரென உயர்த்தப்பட்டது. மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-ல் இருந்து ரூ.5ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12-ல் இருந்து ரூ.19ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ வரை ரூ.17-ல் இருந்து ரூ.24ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   
 
குளிர்சாதன பேருந்துகளில் ரூ.27-ல் இருந்து ரூ.42ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வால்வோ பேருந்துகளில் ரூ.33-ல் இருந்து ரூ.51ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதீநவீன பேருந்துகளில் ரூ.21-ல் இருந்து ரூ.33ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  
 
இந்த கட்டண நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
 
மேலும், இதற்கு முன்பு சென்னை மாநகர பேருந்துகளில் ஒரு நாள் முழுவதும் பயணிக்க ரூ.50 பாஸ் வழங்கப்பட்டது. தற்போது அதன் விலை ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ரூ.1000 ஆக இருந்த மாதாந்திர பாஸ் தற்போது ரூ.1400 ஆக உயர்ந்துள்ளது.
 
இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.