புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (10:00 IST)

சாத்தூர் பட்டாசு ஆலை உரிமையாளர் அதிரடி கைது!

சாத்தூர் பட்டாசு ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சாத்தூர் அருகே அச்சங்குலத்தில் தனியாருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்படுகிறது. கடந்த 13ம் தேதி பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
 
இத்தகவலறிந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்னை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வெடி விபத்தில் மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் 5 தனிப்படையினர் உரிமையாளர்களை தேடி வவந்த நிலையில் தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தன மாரி என்பவரை ஏழாயிரம்பண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.