மருத்துவமனையில் இருந்தவாரே சசிகலா விடுதலை!!
சசிகலா திட்டமிட்டப்படி 27 ஆம் தேதி (நாளை) விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
தற்போதைய நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை கட்டுக்குள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சசிகலா திட்டமிட்டப்படி 27 ஆம் தேதி (நாளை) விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். அங்கு ஆவணங்களில் சிறைத்துறை அதிகாரிகள் கையெழுத்து பெற்று நடைமுறைகளை முடிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.