வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (11:07 IST)

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்!!

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
ஜீவ ஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 
 
ஆனால் உடல் நிலையை காரணம் காட்டி அவர் சரண் அடைய அவகாசம் கேட்டு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் கடந்த 9 ஆம் தேதி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
 
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜகோபால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.