திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (11:15 IST)

தாத்தாவிடம் கடி வாங்கிய பாம்பு மரணம்: போலீஸ் வழக்கு பதிவு!!

குஜராத் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை முதியவர் ஒருவர் திரும்பி கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தை சேர்ந்த 60 வயது மதிக்கதக்க பார்வத் காலா பாரியா என்பவர் சம்பவம் தினத்தன்று சோளங்களை ஏற்றிக்கொண்டிருந்த லாரியின் அருகே நின்றிருந்தார். 
 
அப்போது எங்கிருந்தோ வந்த பாம்பு ஒன்று பார்வத்தின் கை மற்றும் முகத்தில் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த பாம்பை பிடித்து பதிலுக்கு கடித்துள்ளார். கடி வாங்கிய பாம்பு அங்கேயே இறந்துவிட்டது. 
 
இதன் பின்னர் அங்கிருந்தவர்கள் பார்வத்தை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பாம்பின் அதிக விஷத்தன்மையால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவி செய்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.