புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (07:23 IST)

சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நடத்திய நிறுவனர் திடீர் தற்கொலை

சென்னை மயிலாப்பூரில் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்தவர் சங்கர். இவரது நிறுவனத்தில் படித்த பல மாணவர், மாணவிகள் ஐ.ஏஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக நாடு முழுவதும் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக இன்று சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளீவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான யூபிஎஸ் சிவில் சர்வீஸ் தேர்வில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் அனைத்து பயிற்சி மையங்களிலும் பயிற்சி பெற்றவர்களில் 74 மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பதும் இவர்க்ளில் தமிழக மாணவர்கள் மட்டும் 35 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது