புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (15:46 IST)

ஆரோக்கியமற்ற ஆட்டுக்கறி விற்பனை! 500 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்!

சேலத்தில் நோய்வாய்ப்பட்ட ஆடுகளின் இறைச்சிகளை விற்ற கடைகளிலிருந்து இறைச்சிகளை பறிமுதல் செய்துள்ளனர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.

சேலத்தில் நோய்வாய்ப்பட்ட ஆடுகளின் இறைச்சியை பல கடைகளில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கையில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சேலத்தில் பால்பண்ணை, கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் நோய்வாய்ப்பட்ட ஆடுகளை இறைச்சியாக விற்றது தெரிய வந்துள்ளது. அந்த வியாபாரிகளிடமிருந்து நோய்வாய்ப்பட்ட 3 ஆடுகளையும், 500 கிலோ சுகாதாரமற்ற இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று மதுரையில் மீன்களில் ரசாயனம் கலப்பதாக அதிகாரிகள் மீன்களை பறிமுதல் செய்த நிலையில், தற்போது ஆட்டிறைச்சியிலும் சுகாதர கேடுகள் இருப்பது தெரிய வந்திருப்பது அசைவ பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.