செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (14:24 IST)

வந்தேண்டா பால்காரன்..! – எளிமையான தோற்றத்தில் எச்.ராஜா!

தமிழக பாஜக தேசிய செயலாளர் தனது ட்விட்டரில் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது.

தமிழக பாஜக தேசிய செயலாளராக பதவி வகித்து வரும் எச்.ராஜாவின் கருத்துக்கள் எப்போதுமே சமூக வலைதளங்கள் முதல் மீடியா வரை அனைத்து இடங்களில் ட்ரெண்டிங் ஆவதுண்டு. கடந்த காலங்களில் பாஜக திட்டங்கள் குறித்த பல்வேறு விளக்கங்களை அளிப்பதற்கும், எதிர்க்கட்சிகளை வரலாற்றிலிருந்து சம்பவங்களை மேற்கோள் காட்டி பேசுவதற்கும் தனது ட்விட்டர் தளத்தை உபயோகித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது வீட்டுக்கு வாங்கிவந்த பசு ஒன்றிடம் பால் கறக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதை ஷேர் செய்து வரும் பாஜக அபிமானிகள் ‘மாநிலத்தின் தேசிய செயலாளராக இருந்தும் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே?” என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதேசமயம் அப்படியே நேர்மாறாக எச்.ராஜாவை கிண்டலடிக்கு நெட்டிசன்கள் பலர் ராமராஜன் படத்தில் பால்கறக்கும் காட்சிகளோடு ஒப்புமைப்படுத்தி கிண்டல் செய்தும் வருகின்றனர்.