புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 21 அக்டோபர் 2017 (11:37 IST)

வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடும் சேலம் கலெக்டர்

சமீபத்தில் சேலம் மாவட்ட கலெக்டராக பதவியேற்ற ரோஹினி அவர்கள் அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறார்



 
 
இந்த நிலையில் டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களும் ஈடுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் உத்தரவிட்டதை அடுத்து சேலம் கலெக்டர் ரோஹினி நகர் முழுவதும் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.
 
இன்று காலை சேலம் கொண்டலாம்பட்டி பகுதிக்கு சென்ற கலெக்டர் ரோஹினி அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் டெங்கு கொசு ஒழிப்பு பணியின்போது பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.