புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (11:56 IST)

விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை படைத்த் ரஷ்ய வீரர்கள்

விண்வெளியில் ரஷியாவை 2 வீரர்கள் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர் (ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது.
 
6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள் அங்கு தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகிய 2 வீரர்கள் தற்போது விண்வெளி ஆய்வகத்தில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் 2 பேரும் ஆய்வகத்தைவிட்டு வெளியே வந்து 8 மணி 13 நிமிட நேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்து முந்தைய சாதனையை முறியடித்தனர். இதற்கு முன்பு 8 மணி 7 நிமிடம் விண்வெளியில் நடந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. புவியீர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் அவர்கள் படைத்த சாதனை மிகப்பெரியது.