Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கங்குலி சாதனையை ஓரங்கட்டிய கோலி

Ganguly and Kohli
Last Updated: ஞாயிறு, 28 ஜனவரி 2018 (15:21 IST)
தென் ஆப்பரிக்கா எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றி பெற்றதன் மூலம் முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை கேப்டன் கோலி ஓரங்கட்டினார்.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பரிக்க அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தே அணி இந்த டெஸ்ட் தொடரில் வெற்றிப்பெற்றது. அதன்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பரிக்க அணி டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்தது. இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது 21வது வெற்றியை பதிவு செய்தார். இதன்மூலம் கேப்டனாக இந்திய அணிக்கு அதிக வெற்றிகள் பெற்றுக்கொடுத்த பட்டியலில் கங்குலி சாதனையை சமன் செய்தார்.
 
தோனி 27 வெற்றிகள் பெற்று கொடுத்து முதலிடத்தில் உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :