செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (14:38 IST)

கட்-அவுட் பேனர் வைக்கக்கூடாது, மீறினால் நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை..!

திமுக தலைவர்களின் கூட்டங்களின் போது தலைவர்களின் பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் வைக்கக்கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார் 
 
திமுகவினர் பேனர்கள் மற்றும் கட் அவுட் வைக்க கூடாது என்றும் இந்த அறிவுறுத்தலை மீறி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திமுக தொண்டர்களுக்கு எச்சரிக்கை வைத்துள்ளார். 
 
சாலை மற்றும் தெருவின் வழியாக வழிநெடுக பேனர்கள் வைத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்ட கூடாது என்றும் அவர் தொண்டர்களுக்கு அறிவுருத்துள்ளார். ஏற்கனவே பலமுறை இதேபோல் அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களுக்கு பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி இருந்தாலும் தொடர்ச்சியாக பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran