வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (18:18 IST)

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: செங்கோட்டையன்

அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி கடும் விமர்சனம் செய்து வந்தனர் என்பதும் இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறும் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை அதிமுகவின் எம்பி தம்பிதுரை சந்தித்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக பாஜக கூட்டணி குறித்து தெரிவிக்காத ஒன்றை தான் தெரிவித்தது போல் கூறப்படுவது வருத்தத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்  எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து முகநூலில் வீடியோ வெளியிட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran