வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:44 IST)

திருநங்கைக்கு சொந்தமான இடத்தை தனிநபர் அகற்றி வருவதால், தனி நபரை கண்டித்து திருநங்கைகள் சாலை மறியல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள நத்தக்குளம் பகுதியில் ரேணுகா என்ற திருநங்கைக்கு Standard விவசாய நிலத்தை அருகில் உள்ள தனிநபர் ஒருவர் அவரது இடத்தை ஜேசிபி எந்திரம் வைத்து அகற்றி வருவதாக கூறி காவல் துறையினருக்கு  மனு அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த ரேணுகா என்ற திருநங்கைக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை செல்லும் மும்முனை சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டும் தங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற கோரி மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக்கொண்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 
தகவல் அறிந்து வந்த காவல் துறையினரிடம் எங்களது கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் சாலை மறியலில் கைவிட மாட்டோம் என காவல் துறையினரிடம் திருநங்கைகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
பின்னர் நீண்ட நேரம் வாக்குவாதத்திற்கு பின்னரே உங்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறோம் என காவல்துறையினர் வாக்குறுதி அளித்ததால் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.