சென்னை உள்பட 5 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது: பலத்த பாதுகாப்பு
சென்னையில் உள்ள இரண்டு வார்டுகள் உள்பட மொத்தம் ஐந்து வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் சற்றும் 5 வார்டுகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது
சென்னையில் உள்ள இரண்டு வார்டுகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 5 வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இந்த மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இந்த வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
5 வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நின்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது