வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (20:08 IST)

இதுதான் தமிழன் குணமா? வயிறு எரிகிறது! – ராமதாஸ் வேதனை!

தமிழகத்தில் பொங்கல் அன்று மது விற்பனை பரவலாக நடைபெற்றதை நினைத்து தனது வயிறு எரிவதாக பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மதுக்கடைகள் நடத்துவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர் பாமக தலைவர் ராமதாஸ். தற்போது ஆளும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் அவ்வபோது மதுக்கடைகளை மூட வேண்டியது குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையின் மூன்று தினங்களில் மட்டும் டாஸ்மாக்கில் 600 கோடிக்கும் மேல் மது வகைகள் விற்பனை ஆகியுள்ளது. இதுகுறித்து தனது வேதனைகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராமதாஸ் ” இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில்  ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும். இந்த அவலம் என்று தீரும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் பொங்கலுக்கு கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் விற்காமல் கிடக்க மதுக்கடைகளில் மட்டும் மாநாடு போல கூட்டம் கூடுவதாக கூறியுள்ளார்.