ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (22:04 IST)

ரஜினியின் இன்றைய அறிக்கை எம்ஜிஆர் பாணி அரசியலா?

பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது அந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அந்த நடிகரின் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள்தான் இருப்பார்கள். விஜயகாந்த், கமல்ஹாசன் கட்சியில் இதுதான் நடந்துள்ளது. நாளை விஜய், விஷால் கட்சி ஆரம்பித்தாலும் இதுதான் நடக்கும்

ஆனால் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரசிகர் மன்றத்தில் 20, 30 வருடங்கள் இருந்தாலும், அவர்கள் கட்சியின் நிர்வாகி பதவிக்கு தகுதியானவர்கள் என்று எடுத்து கொள்ள முடியாது, மக்களின் மனநிலையை புரிந்து நடப்பவர்களே நிர்வாகிகளாக தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை ரஜினியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

எம்ஜிஆர் அரசியல் கட்சி தொடங்கும்போது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து கட்சியின் நிர்வாகிகளாக நியமனம் செய்தார். அதே பாணியில் ரஜினியும் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.