7 பேர் விவகாரம் குறித்து தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை: ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று அளித்த பேட்டியின்போது ஒரு நிருபரிடம் 'எந்த 7 பேர்' என்ற கேட்ட கேள்வியை ஒருசில ஊடகங்களும் ஒருசில அரசியல்வாதிகளும் திரித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
அந்த நிருபர் தன்னுடைய கேள்வியை மொட்டையாக 7 பேர் விடுதலை என்று கேட்டதால் ரஜினி 'எந்த 7 பேர்' என்று கேட்டார். அவர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் அல்லது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் என்று விளக்கமாக கேட்டிருந்தால் ரஜினியிடம் இருந்து அந்த கேள்வி எழுந்திருக்காது.
இந்த நிலையில் ரஜினிக்கு தமிழக அரசியலே தெரியவில்லை, நாட்டு நடப்பே தெரியவில்லை என்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பதிலளித்துள்ள ரஜினிகாந்த், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்; கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் தெளிவாக பதிலளித்திருப்பேன். 7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை என்று கூறியுள்ளார்.