திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (09:01 IST)

ரஜினி இன்று மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை

சென்னை: நடிகர் ரஜினி காந்த். தனது ரஜினி மககள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி அமைப்பது, எத்தனை சீட் பெறுவது என்பது குறித்த பேச்சுவார்த்தையில் பிஸியாக உள்ளன. இதற்கிடையே அரசியலில் களம் இறங்குவதாக அறிவித்துவிட்ட ரஜினி, இதுவரை சத்தம் இல்லாமல் படத்தில் நடிக்கும் வேலையில் தான் கவனம் செலுத்திவந்தார்.

இதுவரை நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக எந்த அறிவிப்பையும் ரஜினி வெளியிடவில்லை. இதனிடையே இன்று தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசுகிறார். இந்த கூட்டத்தில் தேர்தல் நிலைப்பாடு மற்றும் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு உள்ளிட்டவற்றை விவாதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.