செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (15:29 IST)

அதிகரிக்கும் போலிஸ் தற்கொலை – மனநல ஆலோசனை அறிமுகம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் போலிஸாரின் தற்கொலைகளைத் தடுக்க போலிஸாருக்கு மனநல ஆலோசனை அளிக்கும் ‘நிறைவு வாழ்வுஎன்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் பணிச் சுமையால் மன அழுத்தம் அதிகமாகி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 441 போலீஸார் தற்கொலை செய்துள்ளனர். இந்தத் தற்கொலைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தமிழக அரசு ரூ.10 கோடியில் போலீஸாருக்கான ‘நிறைவு வாழ்வு திட்டம்’ தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் போலிசாருக்கு மனநல மருத்துவர்களின் மேற்பார்வையில் மன நலப்பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்காக 400 நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப் பட்டு பெங்களூருவில் நிமான்ஸ் மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டனர். இந்த மருத்துவர்கள்தான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட போலீஸாருக்கும் மனநலப் பயிற்சி வழங்க இருக்கின்றனர்.

வார இறுதி நாட்களில் ஒரு அணிக்கு 40 போலீஸார் வீதம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் போலிசாரின் குடும்பங்களுக்கும் மனநலப் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.