1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (10:06 IST)

பாபா குகையில் சிறப்பு பூஜை: இமயத்துக்கு கிளம்பிய ரஜினி பேன்ஸ்!

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி விரும்பி தியானம் செய்யும் இமயமலை பாபா குகையில் சிறப்பு தியானம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்வதற்காக மதுரையிலிருந்து ரஜினி ரசிகர் ஏ.எம்.கவுண்டர் இமய மலைக்கு புறப்பட்டார்.
 
வருடாவருடம் கடந்த பத்து வருடங்களாக இமயமலையில் உள்ள பாபா குகையில் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி சிறப்பு தியானமும் சிறப்பு பூஜையும் செய்வதற்காக 71 நாள்கள் விரதம் இருந்து மதுரையிலிருந்து ரஜினி ரசிகர் மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.கவுண்டர் இமயமலை புறப்பட்டார்.
 
கடந்த பத்து வருடங்களாக இமயமலையில் உள்ள பாபா குகைக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார் ஏ.எம்.கவுண்டர் எனும் மதுரை ரஜினி ரசிகர். அவர் இந்த வருடமும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளான அன்று பாபா குகையில் சிறப்பு பூஜையும் சிறப்பு தியானம் செய்வதற்காக மதுரையில் இருந்து ரயில் மூலமாக பெங்களூர் புறப்பட்டு சென்றார். 
 
பெங்களூரில் இருந்து விமானம் மூலமாக இமயமலை பாபா கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக அந்த மலைப்பகுதியில் கீழ் உள்ள கொக்குசிமா எனும் மலை கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் மலைப்பகுதியில் நடந்து சென்று சரியாக டிசம்பர் 12 ஆம் தேதி காலை பாபா குகையில் சிறப்பு தரிசனமும் சிறப்பு தியானமும் செய்ய உள்ளார் அதற்காக புறப்பட்ட ஏ.எம்.கவுண்டருக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து  மதுரையை சேர்ந்த ரஜினி ரசிகர்கள்  சிறப்பான வழியனுப்பு விழா நடத்தி அனுப்பி வைத்தனர். 
 
மதுரை ரயில் நிலையம் முன்பாக உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி  இனிப்பு வழங்கி ரஜினியின் பிறந்தநாள் விழாவிற்காக ரஜினியின் பிறந்தநாளில் பாபா குகையில் தியானம் செய்ய செல்லும் ஏ.எம்.கவுண்டரை மதுரை ரஜினி ரசிகர்கள் இமயமலை பாபா குகைக்கு அனுப்பி வைத்தார்கள். ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள இந்த நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது.